Wednesday, November 30, 2011

கூடங்குளம் அணு உலைகள் ஆபத்தானவை. எவ்வாறு? ஒரு தொகுப்பு


கூடங்குளம் அணு உலைகள் ஆபத்தானவை. எவ்வாறுஒரு தொகுப்பு

கூடங்குளத்தில் ஆயிரக்கணக்கான அணு விஞ்ஞானிகள் இருப்பதாக அணு மின் துறை கூறுகிறது. போகிற போக்கை பார்த்தால்அணு உலைகளை குளிர்விப்பது போல,கூடங்குளத்தை சுற்றி உள்ள அனைத்து கிராம மக்களுக்கும்விஞ்ஞானி பட்டத்தை கொடுத்து அவர்களையும் குளிர்விக்க அரசு முயற்சி செய்தாலும் செய்யலாம். விஞ்ஞானி பட்டமும் இப்போது டாக்டர் பட்டம் போல ஆகிவிட்டது.

கூடங்குளம் அணு விஞ்ஞானிகள்அணு உலைகள்  பாதுகாப்பானவை என்று பல விளக்கங்களை கூறுகின்றனர். முனைவர் உதயகுமார் இவர்களை போலி விஞ்ஞானிகள்இவர்கள் சொல்வது போலி விஞ்ஞானம் என்கிறார். இவர்கள் அனைவரும் விஞ்ஞானிகள் என்றால்மனித இனத்திற்கு தினமும் பயன்படும் பல  அரிய  பொருள்களை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் ஐசக் நியூட்டன் போன்றவர்களை எப்படி அழைப்பது?. அது கிடக்கட்டும்.  ஆனால்அந்த காலத்து கவர்ச்சி அணு குண்டுகளை பற்றி மட்டுமே தெரிந்த   எனக்கு இந்த அணு உலைகள் குறித்து ஒன்றும் தெரியாது. இருப்பினும்அம்மாஞ்சி அப்பாவியான எனக்கு சில கேள்விகள் கேட்க தோன்றுகிறது. அவை கீழே:

வாதம் 1 :- கூடங்குளம் அணு உலைகள் தரமாக கட்டப்படவில்லை. தரம் குறைந்த கலப்பட பொருட்களை கொண்டு ( சில வருடங்களுக்கு  முன்னர் கூடன்குளம்  கட்டுமானத்திற்கு  ஆற்று ணலுடன்  கடல் மணலும் கலக்கபட்டு  இருந்ததை மாவட்ட கலெகடர் கண்டுபிடித்து நிறுத்தி வைத்து  இருந்தது செய்திஇடிந்தகரையை சேர்ந்த ஒருவர் முழு உலையும் கடல் மண்ணால் மட்டுமே குழைத்து பூசி வைக்கப்பட்டுள்ளது என்று கூறியது,இன்றைய புதிய தலைமுறை T .V   செய்தி ) பாதுகாப்பற்ற முறையில் கட்டப்படுள்ளன. இந்த அணு உலைகள் ஆறு RICHTER SCALE நில நடுக்கத்தை தாங்கும் என்று அணு மின் நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர். பேரறிஞர்பல்துறை  விஞ்ஞானி அப்துல் கலாமும் இதை வழி மொழிந்துஇந்த அணு உலைகள் ஆறு RICHTER SCALE -ஐ தாங்கும் வல்லமை படைத்தவை என்று நற்சான்றிதழ் வழங்கி உள்ளார்.

இதில் கூத்து என்ன என்றால்,  அனுபவ அறிவின் மூலம் வீடுகள் கட்டும்,நமது கொத்தனார்கள் கட்டும் நமது வீடுகளே ஆறுRICHTER SCALE நில நடுக்கத்தை தாங்கும் என்பது தான்.

பெரு நகரங்களில் ஒன்பது RICHTER SCALE -ஐ தாங்கும் அடுக்கு மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு வந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

குஜராத்ஜாம் நகரில் அமைந்துள்ள RELIANCE REFINERY , ஒன்பது RICHTER SCALEநிலநடுக்கத்தை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. அதனால் தான்,குஜராத்தில் 2001  -ம் ஏற்பட்ட 7 .4 நில நடுக்கத்தை அது தாங்கி நின்றது. செய்தியை படிக்க கீழே சொடுக்கவும்.


ஒரு தனியார் நிறுவனத்தால்பத்து வருடங்களுக்கு முன்னர்,ஒன்பது RICHTER SCALE அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி விற்க இயலும் போது,  ஆயிரகணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்டு REFINERY வளாகம் அமைக்க இயலும் போதுஒரு மத்திய அரசு நிறுவனத்தால்ஏன் ஒன்பது RICHTER SCALE நில நடுக்கம் தாங்கும் அணு உலைகளை  அமைக்க இயலவில்லை?. அல்லதுஅதிக ஆபத்து இல்லாத வீடுகளும், REFINERY வளாகமும்   ஒன்பது RICHTER SCALE -இல் அமைக்கப்படும்போதுஅதிக ஆபத்து நிறைந்த அணு உலைகள் 12 RICHTER SCALE -இல் அமைக்கப்பட வேண்டாமா?

ஆறு RICHTER SCALE என்பது ஒன்றுமே இல்லை. கடந்த 8 -ம் தேதி அன்றுவட மாநிலங்களில் ஆறு RICHTER SCALE நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது தின தந்தியில்மூன்றாவது பக்கம் கடைசியில் ஒரு சிறிய செய்தி.மக்கள் பூமி அதிர்ச்சியை உணர்ந்தனர். உயிர்  சேதம் ஏற்படவில்லை என்று. இதில் கட்டிடங்கள் இடியவில்லை. 9 -ம்  காலை ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம் 6 .8 RICHTER என்றும் கட்டிடங்கள் குலுங்கின என்றும் செய்தி சொல்லுகிறது. இதிலும் கட்டிடங்கள் இடியவில்லை.

ஆக, 6 -க்கு மேலே நில நடுக்கம் என்றால்நமது வீடுகள் ஒரு குலுங்கு குலுங்கும். ஆனால்கூடங்குளம் அணு உலைகள் வாய் பிளந்து விடும். அப்போது இவர்கள் என்ன செய்வார்கள்?

அணுமின் நிலையம் உள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது என தேசிய இயற்கைப் பேரிடர் மேலாண்மை ஆணையம் 13 -ம் தேதி   தெரிவித்துள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான இக்குழுவின் துணைத் தலைவர் சசிதர் ரெட்டி டெல்லியில் இதனைத் தெரிவித்தார் ஆககூடங்குளத்தில் நிலநடுக்கம் ஏற்படும் என்பதை,மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

செய்தியை வாசிக்க கீழே சொடுக்கவும்

கூடங்குளத்தில் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர்எரிமலை வெடித்துள்ளது என்பது புவியியல் ஆய்வாளர்கள் கருத்து. அப்போது வெளிப்பட்ட லாவா குழம்புசுண்ணாம்பு கல்லாகிஇப்போதும் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தான்தாளையூத்து சங்கர் சிமின்ட் கம்பனிக்கு சுண்ணாம்பு கல் கொண்டு செல்லப்படுகிறது.

L &  T போன்ற சிறந்த கட்டுமான நிறுவனத்திற்கு கூடங்குளம் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. அதை விடஅணு மின் துறை அதை மேற்பார்வை செய்யும் லட்சணம் அதை விட சிறந்தது. கர்நாடக மாநிலம் KAIGA -வில்  கட்டப்பட்ட அணு உலை DOME 1994 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  கட்டுமானத்தின் போது இடிந்து  நொறுங்கி விழுந்தது அதற்கு சான்று. STRUCTURE STANDARD -க்கு வேறு உதாரணம் வேண்டாம் என்று நினைக்கிறேன். கூடன் குளம், STANDARD -ம் இது தான்.  கலப்பட பொருள்களை கொண்டு கட்டப்பட்ட இந்த உலைகள்,  ஏனோ இந்த மழைக்கு  DOME விழவில்லை. அடுத்த மழைக்கு பார்க்கலாம்.

KAIGA -வில் DOME இடிந்த செய்தியை படிக்க கீழே சொடுக்கவும்.


இது தான்இநதிய அணு மின் துறையின் மிக சிறந்த கட்டுமானத்திற்கு சான்று.

சமீபத்தில் பெய்த மழையால்வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதாகநெல்லை கலெக்டர் கூறியுள்ளார். கடல் மட்டத்தில் இருந்து வளாக உயரம் ஆறுஏழு மீட்டர்ஒன்பதரை மீட்டர் என்று புலிகேசிகள் பீலா விடுகிறான்கள்.
 
இந்த உயரங்கள் உண்மை என்றால் ஏன் வளாகத்தில் உள்ள தண்ணீர் வடியவில்லை?அல்லதுஇதை அணு மின் துறையின் உயர் தரமான கட்டுமானத்திற்கு ஒரு சான்றாக எடுத்து கொள்ளலாமா? 
கடல் அருகில்குறைந்தது ஆறு மீட்டர் உயரத்தில் இருக்கும் வளாக மழை நீரை வடிக்கவடிகால் கட்ட தெரியாதவன்கள்,அணு உலை கட்டுகிறான்கலாம்அதுவும் உயர்தர பாதுகாப்பு அம்சங்களுடன்! நல்ல நகைசுவை.

பல் துறை விஞ்ஞானி அப்துல் கலாமின் பல்துறை உதவியாளர் பொன்ராஜ் இப்போதே கூடங்குளம் நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகளை கூற துவங்கி விட்டார்.

கூடன்குள எதிர்ப்பு போராட்டத்திற்கு கரரணம் NUCLEAR DISASTER காரணம் அல்ல என்றும்நிர்வாகத்தின் PR DISASTER ( PUBLIC RELATIONS )  தான் காரணம் என்றும் கூறுகிறார்.

அணு உலை TRIAL TEST நடந்த போதுமிக பலமான சத்தம் எழுந்ததற்கு காரணம்,நிர்வாகம் அந்த பரிசோதனையை இரவில் நடத்தியது தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்.
ஆனால்பகலில் தான் இந்த பரிசோதனை நடந்துள்ளது.

அணு உலைகள் வெடித்த பின்னர்இவரை போன்றவர்கள் டெல்லியில் இருந்து கொண்டுநிர்வாகம் அந்த தவறை செய்ததுஇந்த தவறை செய்தது. அதனால் அணு உலைகள் வெடித்து விட்டன என்று பேட்டிகள் கொடுப்பார்கள் என்று நம்பலாம்.

 ""வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறுபோலக் கெடும்''

இயற்கையை முழுமையாக கணித்து இயந்திரங்களை படைப்பவன் இன்னும் பிறக்கவும்  இல்லை. பிறக்க போவதும் இல்லை.

உப வாதம்:- கடந்த இரண்டு மாதமாக நடந்து வரும் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பணம் எங்கிருந்து வருகிறது என்று சகல வல்லமை படைத்த உளவு துறை நிறுவனங்களை தனது கட்டுப்பாடில் வைத்திருக்கும்,மத்திய அரசு மயிரை பிய்த்து கொண்டு இருக்கிறது.

ஒரு மிக சிறிய சந்தேகம் என்ன என்றால்இநதிய சுதந்திர போராட்டம் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்ததே?. அப்போதுகாந்திக்கும்காமராஜிக்கும் இன்ன பிற தலைவர்களுக்கும் பணம் கொடுத்தது யார்?. அதுவும் அமெரிக்கா தானா?

நன்றி: ஒரு நண்பரின் மின்னஞ்சல்

1 comment:

  1. 1.முனைவர் உதயகுமார் எந்த மன்னாரன் பல்கலைக் கழகத்தில் பட்டம் வாங்கினார். எப்படி 50 ஆண்டு அனுபவம் வாய்ந்த அணுசக்தி துறைக்கு தெரியாத பல விசயங்கள் இவர் மட்டும் தெரிந்து கொண்டார். இவ்வளவு அறிவுள்ள இவர் ஏன் எதையும் கண்டுபிடிக்கவில்லை. படிப்பறிவில்லாத இடிந்தகரையை தேர்ந்தெடுத்தது ஏன்.? போலி விஞ்ஞானிகள் என்று சொல்லும் முன் இந்தியா அணு சோதனை நடத்தியதும் அதை எதிர்க்காமல் கொண்டாடியது ஏன் என்று சொல்ல முடியுமா?. அப்போது இந்த போலி விஞ்ஞானிகள் கண்ணுக்கு தெரியவில்லையா?

    2.உங்கள் வீட்டை கடல் மண் கொண்டு கட்டுவீர்களா? இது என்ன சாலை போடுகிற துறை என்று நினைத்தீர்களா?
    இதை பொய்தகவல் என்று நிருபித்தால் ஏன்ன செய்வீர்கள். அணுமின் நிலைய கட்டுமானம் பற்றி ஏதாவது தெரியுமா?
    கட்டுமானம் பொதுடெண்டர் விடப்பட்டு ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரெக்சன் கம்பெனி எடுத்தது. எல்&றி கம்பெனி எலெக்ட்ரிகல் காண்ட்ராக்ட் எடுத்தது.பிகெசெல் மெக்கானிக்க்கல் காண்ட்ராக்ட் எடுத்தது.உங்கள் கணக்குப் படி இவர்கள் எல்லோரும் போலிகள்.நீங்கள் மட்டும் கண்ணியவான்கள். என்ன கொடும சார் இது?, இந்த கம்பெனிக்கெல்லாம் தனி தரகட்டுப்பாடு என்று ஒன்று இருக்கிறது. நீங்கள் வேண்டி விரும்பி கேட்டுக்க் கொண்டாலும் தரம் குறைந்த வேலைகளை செய்யமாட்டார்கள், ஏனெனில் அது அவர்களின் கம்பெனியின் பெயரை கெடுத்துவிடும் என்பதால்.

    6 ரிக்டர் என்பது அவ்விடத்தில் வரக்ககூடிய நிலநடுக்கத்தின் அளவை ஆரய்ந்து கட்டப்பட்டது. உங்கள் யோசனைப்படி 12 ரிக்டர் மற்றும் குப்புசாமி,ராமசாமி யோசனைகள் கூட வரவேற்கப்படுகின்றன. எத்தனை ரிக்க்டரில் கட்டினாலும் இயற்கையை கணிக்க முடியாது. அதற்காக வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளெயும் இருக்க முடியாது.


    3.சில நூறுஆண்டுகளுக்கு முன்னால் எரிமலை என்றால் அதைப்பற்றிய எந்த செய்தியும் இல்லாமல் போனது எப்படி? தமிழ்நாட்டின் வரலாறு களப்பிரர்கள் காலம் தவிர நன்றாகவே தெரிந்தது, ஒருவேளை களப்பிரர்க்காலத்தில் இருந்ததோ என்னவோ? இன்னும் கூடன்குளத்தில் பேய் உள்ளது என்று எப்போது சொல்லப் போகிறீர்கள். ஒரே காமெடிதான் போங்கள்.


    4.KAIGA -வில் DOME இடிந்த செய்தியை படிக்க கீழே சொடுக்கவும்.

    http://www.outlookindia.com/article.aspx?263176


    தினசரி இந்தியாவில் நடைபெறும் விபத்துகளை கணக்கிட்டால் இது கொசுறு என்று சொல்லலாம்.

    5.எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் அவர்களே உங்கள் மூளை நாட்டிற்கு தேவை. வடிகால் போக தனி வழி உள்ளது.



    6.அது நீராவி வெளியேறிய சத்தம்.. நம்மூர் மாரியாத்தா கோயில் குழாய் சத்தத்தைவிட கம்ம்மிதான்.

    7.அதனால் காட்டுவாசி வாழ்க்கையே பொதும் என்று எழுத வேண்டியது தான? பின் எதற்காக மின்வெட்டு என்று கூப்பாடு போடுகிறீர்கள்.இப்படி சொல்கிற கோஸ்டி தான் ஆப்பிள் இபாட் வைத்திருப்பார்கள்/

    8பிரான்சிலும் அமெரிக்காவிலும் போராடாத மத குருமார்கள் இங்கு மட்டும் போராடுவது ஏன்?.

    ReplyDelete

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)

பிடித்தது :)