Wednesday, November 30, 2011

கூடங்குளம் அணு உலைகள் ஆபத்தானவை. எவ்வாறு? ஒரு தொகுப்பு


கூடங்குளம் அணு உலைகள் ஆபத்தானவை. எவ்வாறுஒரு தொகுப்பு

கூடங்குளத்தில் ஆயிரக்கணக்கான அணு விஞ்ஞானிகள் இருப்பதாக அணு மின் துறை கூறுகிறது. போகிற போக்கை பார்த்தால்அணு உலைகளை குளிர்விப்பது போல,கூடங்குளத்தை சுற்றி உள்ள அனைத்து கிராம மக்களுக்கும்விஞ்ஞானி பட்டத்தை கொடுத்து அவர்களையும் குளிர்விக்க அரசு முயற்சி செய்தாலும் செய்யலாம். விஞ்ஞானி பட்டமும் இப்போது டாக்டர் பட்டம் போல ஆகிவிட்டது.

கூடங்குளம் அணு விஞ்ஞானிகள்அணு உலைகள்  பாதுகாப்பானவை என்று பல விளக்கங்களை கூறுகின்றனர். முனைவர் உதயகுமார் இவர்களை போலி விஞ்ஞானிகள்இவர்கள் சொல்வது போலி விஞ்ஞானம் என்கிறார். இவர்கள் அனைவரும் விஞ்ஞானிகள் என்றால்மனித இனத்திற்கு தினமும் பயன்படும் பல  அரிய  பொருள்களை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் ஐசக் நியூட்டன் போன்றவர்களை எப்படி அழைப்பது?. அது கிடக்கட்டும்.  ஆனால்அந்த காலத்து கவர்ச்சி அணு குண்டுகளை பற்றி மட்டுமே தெரிந்த   எனக்கு இந்த அணு உலைகள் குறித்து ஒன்றும் தெரியாது. இருப்பினும்அம்மாஞ்சி அப்பாவியான எனக்கு சில கேள்விகள் கேட்க தோன்றுகிறது. அவை கீழே:

வாதம் 1 :- கூடங்குளம் அணு உலைகள் தரமாக கட்டப்படவில்லை. தரம் குறைந்த கலப்பட பொருட்களை கொண்டு ( சில வருடங்களுக்கு  முன்னர் கூடன்குளம்  கட்டுமானத்திற்கு  ஆற்று ணலுடன்  கடல் மணலும் கலக்கபட்டு  இருந்ததை மாவட்ட கலெகடர் கண்டுபிடித்து நிறுத்தி வைத்து  இருந்தது செய்திஇடிந்தகரையை சேர்ந்த ஒருவர் முழு உலையும் கடல் மண்ணால் மட்டுமே குழைத்து பூசி வைக்கப்பட்டுள்ளது என்று கூறியது,இன்றைய புதிய தலைமுறை T .V   செய்தி ) பாதுகாப்பற்ற முறையில் கட்டப்படுள்ளன. இந்த அணு உலைகள் ஆறு RICHTER SCALE நில நடுக்கத்தை தாங்கும் என்று அணு மின் நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர். பேரறிஞர்பல்துறை  விஞ்ஞானி அப்துல் கலாமும் இதை வழி மொழிந்துஇந்த அணு உலைகள் ஆறு RICHTER SCALE -ஐ தாங்கும் வல்லமை படைத்தவை என்று நற்சான்றிதழ் வழங்கி உள்ளார்.

இதில் கூத்து என்ன என்றால்,  அனுபவ அறிவின் மூலம் வீடுகள் கட்டும்,நமது கொத்தனார்கள் கட்டும் நமது வீடுகளே ஆறுRICHTER SCALE நில நடுக்கத்தை தாங்கும் என்பது தான்.

பெரு நகரங்களில் ஒன்பது RICHTER SCALE -ஐ தாங்கும் அடுக்கு மாடி குடியிருப்புகள் விற்பனைக்கு வந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

குஜராத்ஜாம் நகரில் அமைந்துள்ள RELIANCE REFINERY , ஒன்பது RICHTER SCALEநிலநடுக்கத்தை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. அதனால் தான்,குஜராத்தில் 2001  -ம் ஏற்பட்ட 7 .4 நில நடுக்கத்தை அது தாங்கி நின்றது. செய்தியை படிக்க கீழே சொடுக்கவும்.


ஒரு தனியார் நிறுவனத்தால்பத்து வருடங்களுக்கு முன்னர்,ஒன்பது RICHTER SCALE அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி விற்க இயலும் போது,  ஆயிரகணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்டு REFINERY வளாகம் அமைக்க இயலும் போதுஒரு மத்திய அரசு நிறுவனத்தால்ஏன் ஒன்பது RICHTER SCALE நில நடுக்கம் தாங்கும் அணு உலைகளை  அமைக்க இயலவில்லை?. அல்லதுஅதிக ஆபத்து இல்லாத வீடுகளும், REFINERY வளாகமும்   ஒன்பது RICHTER SCALE -இல் அமைக்கப்படும்போதுஅதிக ஆபத்து நிறைந்த அணு உலைகள் 12 RICHTER SCALE -இல் அமைக்கப்பட வேண்டாமா?

ஆறு RICHTER SCALE என்பது ஒன்றுமே இல்லை. கடந்த 8 -ம் தேதி அன்றுவட மாநிலங்களில் ஆறு RICHTER SCALE நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது தின தந்தியில்மூன்றாவது பக்கம் கடைசியில் ஒரு சிறிய செய்தி.மக்கள் பூமி அதிர்ச்சியை உணர்ந்தனர். உயிர்  சேதம் ஏற்படவில்லை என்று. இதில் கட்டிடங்கள் இடியவில்லை. 9 -ம்  காலை ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம் 6 .8 RICHTER என்றும் கட்டிடங்கள் குலுங்கின என்றும் செய்தி சொல்லுகிறது. இதிலும் கட்டிடங்கள் இடியவில்லை.

ஆக, 6 -க்கு மேலே நில நடுக்கம் என்றால்நமது வீடுகள் ஒரு குலுங்கு குலுங்கும். ஆனால்கூடங்குளம் அணு உலைகள் வாய் பிளந்து விடும். அப்போது இவர்கள் என்ன செய்வார்கள்?

அணுமின் நிலையம் உள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது என தேசிய இயற்கைப் பேரிடர் மேலாண்மை ஆணையம் 13 -ம் தேதி   தெரிவித்துள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான இக்குழுவின் துணைத் தலைவர் சசிதர் ரெட்டி டெல்லியில் இதனைத் தெரிவித்தார் ஆககூடங்குளத்தில் நிலநடுக்கம் ஏற்படும் என்பதை,மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

செய்தியை வாசிக்க கீழே சொடுக்கவும்

கூடங்குளத்தில் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர்எரிமலை வெடித்துள்ளது என்பது புவியியல் ஆய்வாளர்கள் கருத்து. அப்போது வெளிப்பட்ட லாவா குழம்புசுண்ணாம்பு கல்லாகிஇப்போதும் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தான்தாளையூத்து சங்கர் சிமின்ட் கம்பனிக்கு சுண்ணாம்பு கல் கொண்டு செல்லப்படுகிறது.

L &  T போன்ற சிறந்த கட்டுமான நிறுவனத்திற்கு கூடங்குளம் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. அதை விடஅணு மின் துறை அதை மேற்பார்வை செய்யும் லட்சணம் அதை விட சிறந்தது. கர்நாடக மாநிலம் KAIGA -வில்  கட்டப்பட்ட அணு உலை DOME 1994 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  கட்டுமானத்தின் போது இடிந்து  நொறுங்கி விழுந்தது அதற்கு சான்று. STRUCTURE STANDARD -க்கு வேறு உதாரணம் வேண்டாம் என்று நினைக்கிறேன். கூடன் குளம், STANDARD -ம் இது தான்.  கலப்பட பொருள்களை கொண்டு கட்டப்பட்ட இந்த உலைகள்,  ஏனோ இந்த மழைக்கு  DOME விழவில்லை. அடுத்த மழைக்கு பார்க்கலாம்.

KAIGA -வில் DOME இடிந்த செய்தியை படிக்க கீழே சொடுக்கவும்.


இது தான்இநதிய அணு மின் துறையின் மிக சிறந்த கட்டுமானத்திற்கு சான்று.

சமீபத்தில் பெய்த மழையால்வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதாகநெல்லை கலெக்டர் கூறியுள்ளார். கடல் மட்டத்தில் இருந்து வளாக உயரம் ஆறுஏழு மீட்டர்ஒன்பதரை மீட்டர் என்று புலிகேசிகள் பீலா விடுகிறான்கள்.
 
இந்த உயரங்கள் உண்மை என்றால் ஏன் வளாகத்தில் உள்ள தண்ணீர் வடியவில்லை?அல்லதுஇதை அணு மின் துறையின் உயர் தரமான கட்டுமானத்திற்கு ஒரு சான்றாக எடுத்து கொள்ளலாமா? 
கடல் அருகில்குறைந்தது ஆறு மீட்டர் உயரத்தில் இருக்கும் வளாக மழை நீரை வடிக்கவடிகால் கட்ட தெரியாதவன்கள்,அணு உலை கட்டுகிறான்கலாம்அதுவும் உயர்தர பாதுகாப்பு அம்சங்களுடன்! நல்ல நகைசுவை.

பல் துறை விஞ்ஞானி அப்துல் கலாமின் பல்துறை உதவியாளர் பொன்ராஜ் இப்போதே கூடங்குளம் நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகளை கூற துவங்கி விட்டார்.

கூடன்குள எதிர்ப்பு போராட்டத்திற்கு கரரணம் NUCLEAR DISASTER காரணம் அல்ல என்றும்நிர்வாகத்தின் PR DISASTER ( PUBLIC RELATIONS )  தான் காரணம் என்றும் கூறுகிறார்.

அணு உலை TRIAL TEST நடந்த போதுமிக பலமான சத்தம் எழுந்ததற்கு காரணம்,நிர்வாகம் அந்த பரிசோதனையை இரவில் நடத்தியது தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்.
ஆனால்பகலில் தான் இந்த பரிசோதனை நடந்துள்ளது.

அணு உலைகள் வெடித்த பின்னர்இவரை போன்றவர்கள் டெல்லியில் இருந்து கொண்டுநிர்வாகம் அந்த தவறை செய்ததுஇந்த தவறை செய்தது. அதனால் அணு உலைகள் வெடித்து விட்டன என்று பேட்டிகள் கொடுப்பார்கள் என்று நம்பலாம்.

 ""வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறுபோலக் கெடும்''

இயற்கையை முழுமையாக கணித்து இயந்திரங்களை படைப்பவன் இன்னும் பிறக்கவும்  இல்லை. பிறக்க போவதும் இல்லை.

உப வாதம்:- கடந்த இரண்டு மாதமாக நடந்து வரும் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பணம் எங்கிருந்து வருகிறது என்று சகல வல்லமை படைத்த உளவு துறை நிறுவனங்களை தனது கட்டுப்பாடில் வைத்திருக்கும்,மத்திய அரசு மயிரை பிய்த்து கொண்டு இருக்கிறது.

ஒரு மிக சிறிய சந்தேகம் என்ன என்றால்இநதிய சுதந்திர போராட்டம் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்ததே?. அப்போதுகாந்திக்கும்காமராஜிக்கும் இன்ன பிற தலைவர்களுக்கும் பணம் கொடுத்தது யார்?. அதுவும் அமெரிக்கா தானா?

நன்றி: ஒரு நண்பரின் மின்னஞ்சல்

கேரள அரசு பீதி கிளப்ப காரணம் என்ன?(v must know about our rights in M.P DAM)


கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டியவுடன், கேரள மக்களிடம்பீதியை ஏற்படுத்தும் முயற்சிகளும், இந்தத் தருணத்தை அரசியலாக்கும் முயற்சிகளும்தொடங்கிவிட்டன.

 முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி. 1979-ம் ஆண்டு வரை இந்தஅணையில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் 152 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது.ஆனால், அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற தவறான செய்தி ஏற்படுத்திய பீதியின்காரணமாக, நீரைத் தேக்கிவைக்கும் அளவை 136 அடி உயரமாகக் குறைத்துக்கொள்ள தமிழகஅரசு முன்வந்தது. இப்போது இந்த 136 அடியை தண்ணீர் எட்டியதும், அணை உறுதியாக இருப்பதுதானே அம்பலப்பட்டுவிடுமே என்கின்ற பயம் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. 

 அணை பலமாக இருக்கிறது என்பதற்கு அதன் நீர்க்கசிவு அளவு ஒரு முக்கிய சான்றாகும்.அணையின் நீரை தொடர்ந்து 136 அடிக்குப் பல நாள்கள் தேக்கி வைக்கும்போது, கசியும் நீரின்அளவைத் தொடர்ந்து நாள்தோறும் பதிவு செய்து, அணை இப்போதும் மிக உறுதியாக இருப்பதைமக்களுக்கு உணர்த்துவதுடன் மத்திய அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் அதைச் சான்றாககாட்டிவிடுவார்களோ என்ற அச்சம் கேரள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. அணைவலுவாக இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடிக்குஉயர்த்தும் நியாயத்தைப் பற்றி தமிழகம் பேசக்கூடுமே என்கிற அச்சமும்தான் இவர்களதுஇப்போதைய கூக்குரலின் பின்புல உண்மை. 

 இடுக்கியைச் சேர்ந்த முல்லைப் பெரியாறு போராட்டக் குழு, இதுநாள் வரையிலும் முல்லைப்பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்றும் புதிய அணையைக் கட்ட வேண்டும் என்றும்கூறிவந்தது. இப்போது தனது நிலையை மாற்றிக்கொண்டு, புதிய அணையைக் கட்டக்கூடாது,பழைய அணையையும் இடிக்க வேண்டும் என்கிறது. இடுக்கி எம்எல்ஏ சாலை மறியல்செய்கிறார். எம்பி-க்களும், கேரள பாசனத் துறை அமைச்சரும் தில்லிக்கு விரைந்துள்ளார்கள்.மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனியுடன் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்கள். 

 புனல் மின்நிலையத்துக்காக கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணைக்கு, போதுமான தண்ணீர்கிடைக்காததால் மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக, முல்லைப்பெரியாறு அணைக்கு கேரளம் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியது என்பதுதான் இந்தப்பிரச்னையின் அடிப்படையே. 
முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு ஏற்பட்டபோது,வல்லுநர்கள் குழு இந்த அணை பாதுகாப்புடன் இருப்பதைக் கூறியும்கூட, கேரள அரசுவேண்டுமென்றே அச்சம் தெரிவித்தது. மேலும் பல கோடி ரூபாய் செலவில் அணைபலப்படுத்தப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அணைக்குச் சேதம் ஏற்படாத வகையில் புதியதொழில்நுட்பத்தில் அணையைப் பலப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை. 

 நீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்துப் பாதுகாப்புப் பணிகளையும் செய்து முடித்து, முல்லைப்பெரியாறு பேபி டேம் பகுதியில் மிகச் சிறிய பணியையும் செய்து முடிக்க முற்பட்டபோது, அதைமுடித்துவிட்டால் நீதிமன்றம் கூறிய அனைத்தையும் தமிழகம் செய்துவிட்டதாக ஆகிவிடுமேஎன்று அஞ்சி, கேரள வனத்துறை அதிகாரிகளைக் கொண்டு, அந்தப் பணியைத் தடுத்துவருகிறார்கள் கேரள அரசின் தரப்பினர். 
கேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும்பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? 
படித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ளாத நிலையில், பாமரருக்கு எங்கேபுரியும் என்கின்ற நினைப்பைத் தகர்த்தெறிந்துள்ளது தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்தபொறியாளர்கள் சங்கம் தயாரித்துள்ள, அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம்.முல்லைப்பெரியாறு- பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் இணைய தளத்திலும்(http://player.vimeo.com/video/18283950?autoplay=1)காணக் கிடைக்கிறது. 


 இதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும் புரிந்துகொள்ளும் வகையிலும்இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. இந்தஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு முன்பாக திரையிடக்கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளையும்கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கிராமங்களில்திரையிடலாம். 


 முல்லைப் பெரியாறு பிரச்னையை வேண்டுமென்றே பெரிதாக்கிக் கேரளம் பீதியைக்கிளப்புவதற்கு அடிப்படைக் காரணம், இடுக்கிக்கு அதிக நீர்வரத்து ஏற்படுத்தி மின்சாரஉற்பத்தியைக் கூட்ட வேண்டும் என்பதால்தான். தமிழகம் தாங்களே இன்னொரு அணையைக்கட்டி விடுகிறோம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியேதடுப்பதற்காக வேறு அணை கூடாது என்கிற கோஷத்தையும் எழுப்பி விட்டார்கள். 

 அங்கே கட்சி மாச்சரியங்களை மறந்து அனைவரும் கைகோத்துத் தமிழகத்துக்கு எதிராக சதிசெய்கிறார்கள். இங்கே நான் திமுக, நீ அதிமுக, அவன் தேமுதிக, இவன் மதிமுக,காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், பாஜக என்று தமிழுணர்வே இல்லாமல் அரசியல் ரீதியாகப் பிரிந்துகிடக்கிறோம். கரை வேட்டிகள் அவிழ்த்தெறியப்பட்டால் மட்டுமே தமிழகம் ஒன்றுபடும்சாத்தியம் போலிருக்கிறது. 

 மத்திய அரசிடம் ஒரு கேள்வி. பல ஆண்டுகளாக இருந்துவரும் உறுதியான அணைஉடைந்துவிடும் என்று கேரளம் பயப்படுவதை, அவர்களது உணர்வுகளை மதிக்கமுற்படும்போது, நீங்கள் கூடங்குளத்தைச் சுற்றி வாழும் தமிழர்களின் நியாயமான அச்சத்துக்கும்,தமிழர்களின் உணர்வுகளுக்கும் மட்டும் செவிசாய்க்க மறுப்பதன் ரகசியம்தான் என்ன?மலையாளிகளுக்கு இருக்கும் அச்சமும், பீதியும், தமிழனுக்குக் கிடையாதா? தமிழர்கள்உணர்ச்சியற்ற ஜடங்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை?

நன்றி: ஒரு நண்பரி மின்னஞ்சல்..

Tuesday, November 29, 2011

Kolaveri IT song


Kolaveri IT song
flop project song

White-u skinu clientu clientu
Clientu heartu Blacku
Issue u Issue u meet u meet u
… My appraisal darku
Why this kolaveri kolaveri kolaveri dude

”mama.. notes eduthuko.. apadiye kaila KT eduthuko”
Pe pe pe pe
Pe pe pe pe
Sariya reverse KT sollu
Ve ve ve ve ve ve ve ve

Why this kolaveri kolaveri kolaveri dude
Why this kolaveri kolaveri kolaveri dude
Why this ….. ……. ……… ah dude

”he he he he.. Super maama super maama.. ready? 1…. 2uu.. 3eee 4”
Pe pe pe pe
Pe pe pe pe
Ve ve ve ve ve ve ve

” Ok. Maama.. now tune change.. uh?”
Kaila Mouse u(Dude:”illa illa only English huh”)
Hand-la mouse uu Mouse la code u
Code u fulla error uu

Empty lifeu
project come u
Life reversu gearu

Bug bug u. Oh my bug u
U showed me BOW u

Beer u beer u..
Holy beer u
I want you here now u

Godu I am dying now u
PM happy how u

This song is for soup IT guys u
We don’t have choice uuuu!!!

Why this kolaveri kolaveri kolaveri…. dudeuuuu

this soup IT song is dedicated to all soup IT guys…….. ;-p

Courtesy: a friend's mail

Monday, November 28, 2011

How to make a JFace dialog resizable in eclipse?

How to make a JFace dialog resizable in eclipse?


We can invoke 
  setShellStyle(getShellStyle() | SWT.RESIZE | SWT.MAX); 
in the dialog's construntor.


For example:
public class DifferencesDialog extends Dialog {

    public MyDialog(Shell parentShell) {
         super(parentShell);
    setShellStyle(getShellStyle() | SWT.MAX | SWT.RESIZE);
    }
//Remainder is omitted
.....
}

Thanks to: http://www.eclipse.org/forums/index.php/m/284206/

பிடித்தது :)